சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து!!
2011ம் ஆண்டு கட்டிட அனுமதிக்காக ரூ.2000 லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.
இதுகுறித்த செய்தி குறிப்பில், இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை சம்மந்தப்பட்ட ஊழல் வழக்கில் குற்றவாளி சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் சங்கரன் என்பர் லஞ்சம் கேட்ட குற்றத்திற்கு ஒரு வருடம் சிறை தன்டைனையும், லஞ்சத்தை பெற்றதற்கு 2 வருடங்கள் என மொத்தம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், இரண்டு குற்றத்திற்கு தலா ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. சங்கரன் புகார்தாரரிடம் கட்டிட கட்டுமானத்தை அனுமதிப்பதற்காக ரூ.2,000 லஞ்சமாக கேட்டு பெற்றபோது கடந்த 2011 ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.