#Breaking : அம்மா உணவகங்களில் மே 17 வரை இலவசமாக உணவு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் அம்மா உணவகத்தில் மே 17 வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இதனால் வழக்கம் போல் செயல்பட்டு அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. எனவே, இன்று முதல் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தி தான் சாப்பிட முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளது.அதாவது,சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 17 ஆம் தேதி வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.