அதிர்ச்சி தகவல்.! நாடு முழுவதுமான கொரோனா பாதிப்பில் 10 சதவீத பங்கை பெற்றுள்ளது சென்னை.!
மும்பை, டெல்லி, சென்னை, தானே, அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பே தேசிய அளவில் 50 சதவீத கொரோனா பாதிப்பு பங்கை பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரையில், 3,41,091 பேர் இந்தியாவில் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,900 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் குறிப்பிட்ட 15 நகரங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பே மொத்த பாதிப்பில் 63 சதவீதமாக உள்ளது. அதே போல குறிப்பிட்ட ஐந்து நகரங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு மட்டுமே தேசிய அளவில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் 50 சதவீதமாகும்.
அதாவது, மும்பை, டெல்லி, சென்னை, தானே, அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பே தேசிய அளவில் 50 சதவீத பங்கை பெற்றுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னையில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பானது தேசிய அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 10.08 சதவீதமாகும்.