கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்த பெண் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.!?

கொரோனாவுக்கான தனிமைப்படுத்தலில் இருந்த பெண், வெளியேற முயன்றபோது 4 வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை ஆலம்பாக்கத்தை சேர்ந்த செல்வி என்கிற பெண் கொரோனா தொற்று காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அரசால் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் கடந்த 1ஆம் தேதி முதல் இருந்துள்ளார். இந்நிலையில், இவர் வெளியில் செல்ல வேண்டும் என கூறியதாகவும், அதற்கு மருத்துவ நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட 4 வது மாடியில் இருந்து வெளியேற முற்படுகையில் தவறி கீழே விழுந்துவிட்டார்.
இதில் செல்விக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுளனது. ஆனால், சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025