தீயணைப்பு துறையின் போராட்டத்தால் சிறுவன் மீட்பு.. பொதுமக்கள் பாராட்டு..

Default Image
  • சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள  முண்டியம்மன்நகர் 7ம் வகுப்பு மாணவன் சுவருக்கு இடையில் சிக்கி தவிப்பு.
  • 2 மணி நேரத்தில் சாதுர்யமாக சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர்களை அந்த பகுதி மக்கள் வெகுவாக  பாராட்டினர்

சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள  முண்டியம்மன்நகரில்  வசித்து வருபவர் மணிகண்டன்.  இவரது மகன் நித்தீஷ் (12 வயது)  தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறான்.இந்நிலையில் நேற்று இரவு நித்தீஷ் வீட்டு அருகில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.அப்போது  வீட்டின் முன் பகுதியில் இருந்த சுற்றுச்சுவருக்கும், அதனை ஒட்டி இருந்த ஒரு தூணுக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் நுழைய முயன்றுள்ளான்.இந்நிலையில் அந்த  இரண்டு சுவருக்கும் நடுவில் சிறிய அளவுதான் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியில்  புகுந்து வெளியே வர நுழைந்தான். ஆனால் அவனால் வெளியே வரமுடியவில்லை  சுவருக்கு நடுவில் சிக்கி கொண்டான்.

Image result for tamil nadu fire service and requirements

இதனால் பயந்து அலறினான். அவனது சத்தத்தை கேட்டு வீட்டினர் அனைவரும்  ஓடிவந்தனர். அவர்கள் எவ்வளவோ முயன்றும் நித்திஷை மீட்க போராடி தோற்றனர். எனவே, செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த வீரர்கள் தூணின் முன்பகுதியை சுத்தியால் லேசாக உடைத்தனர், மேலும்  நித்திஷின் ஆடைகளை கத்தரிகோலால் கிழித்து அகற்றினர்.  பின் அதாவது , 2 மணி நேர கடுமையான போராட்டத்திற்க்கு மத்தியில்   அவனை பத்திரமாக மீட்டனர். 2 மணி நேரத்தில் சாதுர்யமாக சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரர்களை அந்த பகுதி மக்கள் வெகுவாக  பாராட்டினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்