ரூ.14.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் – திறந்து வைத்த முதல்வர்!
சென்னை:கிண்டியில் கட்டப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது திறந்து வைத்துள்ளார்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி கிண்டியில் கத்திப்பாரா பாலத்தின் கீழ் மெட்ரோ ரயில் நிறுவனம், பெருநகர வளர்ச்சி குழுமத்தால் இணைந்து ரூ.14.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள,கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார்.
அதன்பின்னர்,பேட்டரி வாகனத்தில் ஏறி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் அவர்கள் பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து,கத்திப்பாரா சதுக்கத்தில் மரக்கன்றையும் முதல்வர் ஸ்டாலின் நட்டு வைத்தார்.
கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் 3 கி.மீ தூரத்திற்கு நடைபயிற்சி பாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, உணவுக்கூடங்கள், புல்வெளிப்பகுதிகளும் உள்ளன.தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழ் உயிர் எழுத்துக்களுடன் கூடிய அலங்கார விளக்குகளும் இடம் பெற்றுள்ளன.மேலும்,கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் பேருந்துநிலையம், வணிக வளாகம் போன்றவைகளும் உள்ளன.