நிலமோசடி விவகாரம்.. நடிகர் சூரிக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

Default Image

நிலமோசடி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் சூரி, அக்டோபர் 29 ஆம் தேதிக்குள் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது. 

நடிகர் சூரியுடன் நடிகர் விஷ்ணு விஷால் வீர தீர சூரன் எனும் படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படம், சில காரணங்கள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்தநிலையில் நிலம் வாங்க வேண்டுமென நடிகர் சூரி, விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷிடம் கூறினார்.

அதற்கு அவர், சிறுசேரியில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி தருவதாக 3 கோடியே 10 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். சூரி வாங்கிய நிலத்தின் அளவு, 3.10 கோடியை விட மிக கம்மி எனவும், நிலத்தின் மதிப்பை கூட்டி போலி ஆவணம் தயாரித்து தன்னிடம் விற்றது சூரிக்கு தெரியவந்துள்ளது.

மேலும், நிலம் வாங்கித் தருவதாக 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி இருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

இந்நிலையில், நில மோசடி தொடர்பாக விஷ்ணு விஷால் தந்தை மீது புகாரளித்த நடிகர் சூரி, அக்டோபர் 29ம் தேதிக்குள் நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Srivanigundam - School Student
Dharmendra Pradhan
next icc tournament
gold price
Ilaiyaraaja Symphony
virat kohli about aus