சென்னையில் பயங்கரம்.! பிளாஸ்டிக் கவரில் தொழிலதிபர் சடலம்.! கடத்தல் கொலையா.?! போலீசார் தீவிர விசாரணை….
சென்னையில் துப்புரவு பணியாளர்கள் காலையில் தங்கள் வேலைகளை செய்து வரும்போது, சென்னை சின்மயா நகரில் கால்வாயில் பிளாஸ்டிக் கவரின் ஓர் மனித உடல் சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ந்து போன பணியாளர்கள், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்படி உடனடியாக வந்த விருகம்பாக்கம் காவல்துறையினர், அந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் தங்கள் விசாரணையை தொடங்கினார். விசாரித்ததில் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டவர் தொழிலதிபர் பாஸ்கரன் என்பது அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர் வீட்டை விட்டு நேற்று காலை காரில் புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரின் மகன் கார்த்திக் நேற்று ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் சென்றிருந்த கார், சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்தது.
பிரேத பரிசோதனை முடிந்து இறந்து போன பிறகு வெளியான அறிக்கை படி, பாஸ்கரனின் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து தலையில் அடித்த காயங்கள் இருந்துள்ளன. கழுத்து நெரிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவல்கள் பிரேத பரிசோதனையில் கிடைத்துள்ளது.
மேலும் நேற்று அவரது ஏடிஎம் கார்டு மூலமாக இரண்டு முறை பத்தாயிரம் ரூபாய் பத்தாயிரம் ரூபாய் என மொத்தமாக 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. யாரேனும் கடத்தி கொலை செய்து இருக்கலாம். என்றும், கூலிப்படையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் அங்குள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.