சென்னையில் பிராமணர்களின் பூணூல் அறுப்பா ?
மைலாப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பூணூல் அறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் (பேஸ் புக், வாட்ஸ்அப் ) தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போன்று, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து தனது முகநூல் பக்கத்திலிருந்து அந்த பதிவை நீக்கியுள்ளார். மேலும், இதற்கு விளக்கமளித்து அவர் கூறுகையில், நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் பெரியார் அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு எனது முகநூல் அட்மின் என் அனுமதியின்றி பதிவு செய்துள்ளார்.
எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன். எனது பதிவிற்கான கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே தவிர வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
ஹெச்.ராஜாவின் பதிவைத் தொடர்ந்து, நேற்று சென்னை மைலாப்பூர் பகுதியில், 12 பிராமணர்களின் பூணூல், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் அறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் வேலூரில், உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என்று வெளியான தகவலைத் தொடர்ந்து பெரியார் சிலை அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஹெச்.ராஜாவின் பதிவையடுத்து, வேலூர் ராணிப்பேட் பகுதியில் அவரது உருவபொம்மையை எரித்து ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.