சென்னையில் மேலும் இரண்டு மாதங்களுக்கு மாஞ்சா நூலுக்கு தடை!
சென்னையில் ஜூலை 16 ஆம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை மாவட்ட காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
சென்னையில் பட்டம் விடுவதால், பட்டம் அறுந்து அருகில் உள்ள உயர் அழுத்த மின் பாதையில் சிக்கி விடுகின்றது. இதனால், மின்தடை ஏற்பட்டத்தாலும், சாலையில் செல்லும் பயணிகள் மீது மாஞ்சா கயிறு இறுக்கி மரணம் வரை கொண்டு செல்லும் ஆபத்து உள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டத்தை விட மேலும் இரண்டு மாதங்களுக்கு தடையை நீடித்து, ஜூலை 16 ஆம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை மாவட்ட காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
மேலும், கோவையில் சிறுவர்கள் பட்டம் விடுவதைக் தவிர்க்க வேண்டும் என்றும், மீறி பட்டம் விட்டால் அவர்களின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.