சென்னையில் தனியார் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெற்றுள்ளது. இதில் கோடிகணக்கில் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் தற்போது துப்பாக்கி முனையில் மிரட்டி, பிரபல வங்கியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பல கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் பெடரல் வங்கியின் அருகம்பாக்கம் தங்க நகை கடன் பிரிவு கிளையில் இன்று துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்துள்ளது.
முகமூடி அணிந்த கொள்ளை கும்பல், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையர்கள் தப்பி சென்ற பின்னர், அங்கிருந்த மேனேஜர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த முதற்கட்ட தகவலில், கொள்ளையடிக்கப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் எனவும், அடமானத்தில் இருக்கும் லாக்கரில் இருந்த தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
கைரேகை நிபுணர்கள் மூலம், கைரேகை பிரதிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், காவல்துறையினர் மூலம் , சென்னை சுற்றிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
நகை அடமானம் வைத்தவர்கள் வங்கிக்கு நேரடியாகவோ, போன் மூலமோ விசாரித்து வருகின்றனர். அதற்கு வங்கி சார்பில் பதிலளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…