ஒலிம்பிக் போட்டியில் சென்னை ஆயுதப்படை காவலர் தேர்வு..!-ஆணையர் வாழ்த்து..!

Default Image

ஒலிம்பிக் போட்டியில் சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் பா.நாகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் பா.நாகநாதன். இவர் தடகள வீரராக பல பதக்கங்களை வென்றுள்ளார். அனைத்திந்திய காவல் பணித்திறனாய்வு தொடர் ஓட்ட போட்டியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார். மேலும், கடந்த மார்ச் மாதம் ஒலிம்பிக் தகுதி தேர்வு போட்டியில் நாகநாதன் கலந்து கொண்டு 4*400 மீ தொடர் ஓட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்றுள்ளார். இவரின் கடுமையான முயற்சி மற்றும் பயிற்சிகளால் ஒலிம்பிக் தடகள போட்டியில் பங்கேற்க இவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தற்போது ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் 4*400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இவர் ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இந்தியாவிற்கு தங்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளும் ஆயுதப்படை காவலர் பா.நாகநாதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Karaikal holiday
mk stalin about CentralGovt
Rohit Sharma CT
Girl sexually harassed
Virat Kohli shubman gill
kumbh mela fire accident