சென்னை அண்ணா நகர் திமுக எம்.எல்.ஏ உள்பட 5 பேர் விடுதலை – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ரேஷன் பொருட்கள் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து திமுக எம்எல்ஏ உள்பட 5 பேர் விடுதலை.
கடந்த 2017ம் ஆண்டு ரேஷன் பொருட்கள் விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ரேஷன் பொருட்கள் விலையை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து திமுகவினர் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த போராட்டத்தில் திமுக எம்எல்ஏ உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ரேஷன் பொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து திமுக எம்எல்ஏ உள்பட 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளது. எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், சென்னை அண்ணா நகர் திமுக எம்எல்ஏ மோகன் உள்பட 5 பேர் விடுதலை செய்தது உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025