கள்ள காதலனை தீர்த்துக்கட்ட கணவன் உதவியை நாடிய பெண்! திடுக்கிடும் தகவல்கள்!
- சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார்.
- இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவகுமார் மாதேஸ்வரி தம்பதியினரால் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரியவந்தது.
சென்னை அனகாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். இது குறித்து கார்த்திக்கின் உறவினார்கள் போலீசில் புகாரளித்தனர். போலிஸ் விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பக்கம் கார்த்திகேயனின் செல் போன் அணைக்கப்பட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் பல திடுக் தகவல்கள் வெளியாகின. அதாவது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சிவகுமார் – மாதேஸ்வரி தம்பதி சென்னையில் சில காலங்கள் வசித்து வந்துள்ளனர். அப்போது, மாதேஸ்வரிக்கும், கார்த்திகேயனுக்கு தவறான பழக்க வழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்து சிவகுமார், தனது மனைவி மாதேஸ்வரியை அழைத்து கொண்டு சித்தூர் சென்றுவிட்டார். இருந்தாலும் கார்த்திகேயன் தொடர்ந்து மாதேஸ்வரிக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால், கார்த்திகேயனை கொலை செய்ய திட்டமிட்ட மாதேஸ்வரி, அதற்கு தன் கணவனிடம் ஒரு பொய் கூறியுள்ளார்.
அதாவது, மாதேஸ்வரி, தான் குளிக்கும் புகைப்படத்தை தானே வீடியோ எடுத்து, அதனை தன் கணவர் சிவகுமாரிடம் காட்டி, இந்த வீடியோ கொண்டு கார்த்திகேயன் என்னை மிரட்டி வருகிறார் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், தன் மனைவி மூலமாக கார்த்திகேயனை வரவழைத்து, அவரை கொலை செய்துவிட்டு தன் வீட்டு பின்புறமே புதைத்துவிட்டனர்.
இது போன்ற தவறான பழக்கவழக்கம் கொண்டவர்களுக்கு மட்டும் இது பாதிக்காது. அவரை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும் என்பதை சற்று புரிந்து கொள்ள வேண்டும்.இந்த சம்பவம் தவறான பழக்கவழக்கம் கொண்டவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.