சென்னையில் கடந்தாண்டு தீபாவளியை விட இந்தாண்டு தீபாவளிக்கு காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.பல மாதங்களாக நாடையே உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .ஆனாலும் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருந்தது .
மேலும் ஒரு சில இடங்களில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசுகளை விற்கவும்,வெடிக்கவும் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலும் தலைநகரான டெல்லியில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் பட்டாசு வெடிக்கவும்,விற்பனை செய்யவும் நவம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தடையை மீறி அங்கு பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
எனவே காற்று மாசு மேலும் அதிகரித்து மோச நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது . அதே நேரத்தில் சென்னையில் காற்று மாசு கடந்த தீபாவளியைக் காட்டிலும் நடப்பு ஆண்டு தீபாவளிக்கு குறைந்துள்ளதாக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,சென்னையில் கடந்த தீபாவளியை காட்டிலும் நடப்பு ஆண்டிற்கான தீபாவளிக்கு காற்று மாசு மற்றும் ஒலி மாசு குறைந்துள்ளது. ஒலி மாசானது 4 முதல் 6 டெசிபல் வரை குறைந்துள்ளதாகவும்,ஆனால் சென்னை திருவல்லிக்கேணியில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 97-லிருந்து 107-ஆக அதிகரித்து காற்று மாசுபட்டு உள்ளதாகவும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…