சென்னை 4 மாடி கட்டிட விபத்து.! நவீன உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புபடையினர்.!
சென்னை 4 மாடி கட்டிட விபத்தில் மீட்பு பணிகளை தொடர நவீன உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சென்னை பாரிமுனை பகுதியில் நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் இன்று புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அந்த கட்டிடமானது திடீரென்று இடிந்து விழுந்து பெரிய விபத்துக்கு உள்ளானது. இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஏழு தீயணைப்பு வண்டிகளில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், கட்டிடத்திற்குள் 6 பேர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதனை அடுத்து, சென்னை அடையாறு பகுதியில் இருந்து தேசிய மீட்பு படையினர் கட்டிட ஈடுபாடுகள் சிக்கியவர்களை மீட்பதற்கு நவீன உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.