சாக்லேட் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.? குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள்.!
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர், நீலாங்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் . அந்த புகாரில், தனது மகள் உட்பட 7 முதல் 10 வயது சிறுமிகள் 3 பேரை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார்.
பெண் மீது அத்துமீறல்… இந்திய வம்சாவளி நபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை.!
இந்த புகாரை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த மாதம் 30ஆம் தேதி 4ஆம் வகுப்பு படிக்கும் அப்பகுதி சிறுவன் ஒருவன் , சிறுமிகளிடம் சாக்லேட் தருவதாக கூறி அருகில் உள்ள மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளான். அங்கு ஒரு நபர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி வெளியில் சொல்ல கூடாது என அந்த நபர் சிறுமிகளிடம் மிரட்டியும் உள்ளார் என சிறுமிகளிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அந்த 4ஆம் வகுப்பு மாணவனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபரை தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார் .
அந்த மாணவனுக்கு தெரிந்த அளவில் குற்றவாளியின் அடையாளத்தை மட்டுமே கூறியுள்ளான். இதனை அடுத்து,மாணவன் கூறிய அடையாளங்களை கொண்டு குற்றவாளியை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். சாக்லேட் கொடுத்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை பிடிக்க நீலாங்கரை மகளிர் காவல் நிலையம் தரப்பில் இருந்து 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.