கணவரிடம் செல்போனில் பேசியபின் கர்ப்பிணிப்பெண் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை?
கப்பல் மாலுமியின் மனைவி சென்னை காசிமேட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராயபுரத்தைச் சேர்ந்த கப்பல் மாலுமி பிரேம்குமாருக்கும் காசிமேட்டைச் சேர்ந்த அனிதாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு பிரேம்குமார் மும்பை சென்றுள்ளார்.
அங்கிருந்து நேற்று அனிதாவுடன் செல்பேசியில் தொடர்புகொண்ட பிரேம்குமார், தகாத முறையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்ணான அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் அனிதாவின் உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணமாகி ஆறு மாதமே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்துக் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.