Chengalpattu – செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதியன்று ஆண்டுவிழா நடைபெற்றது. அப்போது அங்கு பயின்று வந்த எல்கேஜி பள்ளி மாணவியை இரு ஆசியர்கள் அங்குள்ள இருட்டு அறைக்கு அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இது குறித்து குழந்தை தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, உடனடியாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து பள்ளியில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் சுமார் 500 பேர் சமபந்தப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை அடுத்து, நேற்று முன்தினம் இசைப்பயிற்சி ஆசிரியரான கூடுவாஞ்சேரி, நீலமங்கலத்தை சேர்ந்த காயேஷ்குமார் (வயது40) மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த ராசையா (வயது 29) ஆகியோரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது அவர்களை சிறையில் அடைத்துள்ளனர் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் அதிகாரிகள்.
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில்,…