தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு இன்று உதயமாகிறது
தமிழகத்தின் 37வது மாவட்டமாக செங்கல்பட்டு இன்று உதயமாகிறது.
தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக புதிதாக 5 மாவட்டங்கள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, 33-வது மாவட்டமாக தென்காசியும், 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியும்,35-வது மாவட்டமாக திருப்பத்தூரும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையும் உதயமாகியது.இன்று புதிய மாவட்டமாக செங்கல்பட்டு உதயமாகிறது.
இந்த புதிய மாவட்டத்திற்கான தொடக்க விழா செங்கல்பட்டு வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு எஸ்.பி.யாக கண்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- செங்கல்பட்டு
- மதுராந்தகம்
- தாம்பரம்
- செங்கல்பட்டு
- மதுராந்தகம்
- செய்யூர்
- திருப்போரூர்
- தாம்பரம்
- திருக்கழுக்குன்றம்
- பல்லாவரம்
- வண்டலூர்