சென்னை:அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கினைப்பளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாமல் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்,தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் செயற்குழு கூட்டம்,சசிகலா விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.மேலும்,டிசம்பர் மாதத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்,அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே செங்கல்பட்டு மாவட்ட அதிமுக தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலத்தூர் ஒன்றிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.மரகதம் குமரவேல் என்பவர் ஆதிக்கம் செலுத்துவதாகவும்,இலத்தூர் ஒன்றியத்தில் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற பதாகைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால்,தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…