செங்கல்பட்டில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

செங்கல்பட்டில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை மே 17ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் 4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 279 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2,008 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தற்போது செங்கல்பட்டில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டில் பாதிப்பு எண்ணிக்கை 136ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் இதுவரை 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025