தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத் நியமனம்..!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவு.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கே.செந்தில்ராஜ் பணியாற்றி வந்துள்ளார். தற்பொழுது, செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ராகுல் நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 32 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிவகங்கை, திருப்பூர், தஞ்சை, நாகை மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
16 மாவட்ட ஆட்சியர் உள்பட 32 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்.
– அரசு தலைமைச் செயலாளர் திரு. வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள். pic.twitter.com/3t23utpw5B
— DMK IT WING (@DMKITwing) May 16, 2023