காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேங்கடமங்கலத்தில் தனது நண்பர் விஜய் என்பவரது வீட்டிற்க்கு சென்ற பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் அவரது நண்பர் விஜயின் கையாலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக தேடப்பட்டு வந்த விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது துப்பாக்கி பற்றியும், அது எவ்வாறு கிடைத்தது பற்றியும், பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போது விஜய் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளாராம். அதில், சென்னையை அடுத்த பெருமாட்டுநல்லூரை சேர்ந்த ஒரு ரவுடியிடம் துப்பாக்கி வாங்கியதாகவும், தனது நண்பர் முகேஷை அந்த ரவுடி கும்பலிடம் சேர சொல்லி கேட்டதாகவும், முகேஷ் மறுக்கவே கோபத்தில் அவரை சுட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார். அந்த துப்பாக்கி குறிப்பிட்ட ஒரு கல்குவாரியில் இருந்ததாகவும் கூறியிருந்தார்.
இதனை அடுத்து, அந்த துப்பாக்கி கல்குவாரியில் இருந்து எடுக்கப்பட்டது. துப்பாக்கி கிடைத்துவிட்டதால் அடுத்து விசாரணை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…