#BREAKING: செம்பரம்பாக்கம் ஏரி.. நீர்திறப்பு 9,000 கன அடியாக அதிகரிப்பு.!

வங்க கடலில் உருவான நிவர் புயல், 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், கடலூரில் இருந்து கிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு- தென் கிழக்கே 55 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு -தென் கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவிற்கு நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், செம்பரபாக்கம் ஏரியின் நீர் திறப்பு முதலில் 1,500 கனஅடியாக இருந்தது.பின்னர் 3,000 கன அடியில் இருந்து 7 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கத்தில் 22 அடியை நீர்மட்டம் தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025