நெருங்கும் உள்ளாட்சி..! முதல்வர் பழனிச்சாமி டெல்லி பயணம்..!

- முதல்வர் பழனிச்சாமி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
- பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் மனுவாக அளிக்க உள்ளார்.
முதல்வர் பழச்னிசாமி டெல்லிக்கு டிசம்பர் 19 பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதல்வர் பழனிச்சாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளார்.
அதன்பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அவரிடமும் சில முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளார்.ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அன்மையில் நடைபெற உள்ள நிலையில் முதல்வரின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்கள் முனுமுனுப்பை ஏற்படுத்தி உள்ளது.