அரசு ஊழியர்..! அதிகாரிகள் வேலை பார்க்க நாங்கள் இங்கே உட்காரவில்லை..!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை..!
அரசு ஊழியர், அதிகாரிகள் வேலை பார்க்க நாங்கள் இங்கே உட்காரவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துரைப்பாக்கம் குடியிருப்போர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மக்கள் குறைகளை தீர்க்க அரசு அதிகாரிகள் வேலை செய்ய விரும்பாவிடில் தலைமைச்செயலாளர் ஆஜராக உத்தரவிட்டு விளக்கம் கேட்க நேரிடும். மேலும் அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகள் வேலை பார்க்க நாங்கள் இங்கே உட்காரவில்லை. முறையாக வேலை நடக்கிறதா என்பதை மட்டுமே கண்காணிக்க முடியும் என்று காட்டமாக தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக தலைமைச் செயலர் ஆஜராகி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட நேரிடும் என்று உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.