சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய போர்க் கப்பல்களை பார்வையிட இன்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவிடந்தை ராணுவ கண்காட்சியை ஒட்டி, சென்னை துறைமுகத்தில் சுமித்ரா, ஷயாத்ரி, கமோர்டா, ஐராவத், குக்ரி ஆகிய 5 போர் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட இன்றே கடைசி நாளாகும். எனவே கப்பல்களை பார்வையிட பொதுமக்கள் ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.
தீவுத்திடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஆதார் அட்டையை காண்பித்த பின்னர் சிறப்பு பேருந்துகள் மூலம் அனைவரும் துறைமுகத்துக்குள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் ஒரு நபர் ஒரு கப்பலை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…