சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் அவர்கள் மீது விடுபட்ட கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது.
சிபிஐ தாக்கல் செய்த இந்த மனுவானது கீழமை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ தரப்பு மதுரை உயர்நீதிமன்றதில் கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற சிபிஐ மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை ரத்து செய்து, கீழமை நீதிமன்றமே தேவைப்படும் வழக்கு பிரிவுகளை சேர்க்கலாம். தேவைப்பட்டால் நீக்கலாம் என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…