அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரியை சிறப்பாக கொண்டாட அறநிலையத்துறை உத்தரவு!

Default Image

அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியை சிறப்பாக கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழாவானது சிவ பெருமானின் பெருமையை பறைசாற்றும் விதமாக அந்தந்த திருக்கோயில்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆகம விதிகளின்படி நடைபெற்று வருகிறது. தற்போது வரும் 18ம் தேதி நடைபெற உள்ள மகா சிவராத்திரி திருவிழாவினை சிறப்பாக மற்றும் வெகு விமர்சையாக நடத்திட வேண்டும் என அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

shivam

அனைத்து சிவாலயங்களிலும் வரும் சனிக்கிழமை அன்று மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மகா சிவராத்திரி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படியும், நமது பாரம்பரிய கலை கலாச்சார மற்றும் ஆன்மீக / சமய நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

tntemple16

சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும் படி பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். கலைநிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும்போது அந்தந்த பகுதி கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய தடுப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள், கழிப்பறைகள், காவல்துறை பாதுகாப்பு முறையாக ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்