உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்.? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2018-ல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் செல்லத் தடை விதித்த காவல்துறையினருடன் பா.ஜ.க. தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஹெச்.ராஜா காவல்துறையிடம் உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மிக மோசமாகப் பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஹெச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்..? ஏப்ரல் 27-க்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு பாயும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹெச்.ராஜாவுக்கு எதிராக 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், 3 மாதங்கள் கடந்தும் போலீசார் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிபதி ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…