ஹெச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

Default Image

உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்.? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2018-ல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலம் செல்லத் தடை விதித்த காவல்துறையினருடன் பா.ஜ.க. தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஹெச்.ராஜா காவல்துறையிடம் உயர்நீதிமன்றத்தையும்,  காவல்துறையையும் மிக மோசமாகப் பேசியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஹெச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஹெச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசிய ஹெச்.ராஜாவுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்..? ஏப்ரல் 27-க்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு பாயும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹெச்.ராஜாவுக்கு எதிராக 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், 3 மாதங்கள் கடந்தும் போலீசார் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிபதி ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்