இங்கிலாந்து – இந்தியா டி20 போட்டி… சென்னையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ம் தேதி இங்கிலாந்து - இந்தியா மோதும் டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Chepauk railway

சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜன.22ம் தேதி) முதல் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் வின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

இதை தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜனவரி 25ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், போட்டியைக் காண வரும் ரசிகர்களின் வசதிக்காக பயணத்தை எளிதாக்கும் வகையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50க்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20க்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM- 10.37 PM) என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவலை பின்வரும் எக்ஸ் பதிவு வாயிலாக காணவும்.

இதற்கிடையில், சென்னை சேப்பாக்கத்தில் வரும் 25ம் தேதி நடக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்தது. போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்