தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் பொய் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
குடிமை பொருள் வழங்கல் கழகம் தமிழகத்தில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை நடத்தி வருகிறது.இதனிடையே இன்று காலை தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது. ஒருநபர் அட்டைக்கு 12 கிலோவில் இருந்து 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவில் இருந்து 12 கிலோவாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது.ஒரு நபர், 2 பேர் குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி குறைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…