எங்கள் அப்பாவை பழைய இடத்துக்கே மாற்றுங்கள் CM ஐயா- கதறும் அரசு மருத்துவர்களின் குழந்தைகள்!
உலகம் முழுவதும் தற்போது லட்சக்கணக்கானோர் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்நிலையிலும் தன்னலம் பாராது மருத்துவர்கள் காவலர்கள் ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளை பிரிந்து 400 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தொலைவில் இருந்து வேலை செய்து வருகின்றனர். இது குறித்து அண்மையில் பேசிய மருத்துவர்கள் தன்னலம் பாராது பணியாற்றும் தங்களை பழைய இடத்துக்கே மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களது குழந்தைகள் 200 400 கிலோமீட்டர் தங்களை விட்டுப் பிரிந்து பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ள தங்களது அம்மா மற்றும் அப்பாவை மீண்டும் பழைய இடத்திற்கே அனுப்புமாறு முதலமைச்சரிடம் அழுது உருக்கமான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.