தேமுதிகவின் தொகுதி மாற்றம்., கீழ்வேளூருக்கு பதில் தஞ்சாவூர் – விஜயகாந்த் அறிவிப்பு
வரும் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் தொகுதி மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பா.மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு.M.சிவக்குமார் (மாவட்ட கழக அவைத்தலைவர்) நியமிக்கப்படுகிறார் என்று இன்று காலை தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.
அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதில் கீழ்வேலூர் தனி தொகுதியில் ஆர்.பிரபாகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கீழ்வேளூருக்கு பதிலாக தஞ்சாவூர் தொகுதி மாற்றப்பட்டுள்ளது என்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கீழ்வேளூர் தனி தொகுதியில் அமமுக போட்டியிடுவது என்று ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கு பதிலாக மாற்று தொகுதி அடிப்படையில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பா.ராமநாதன் (டீ தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர்) நியமிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
— Vijayakant (@iVijayakant) March 16, 2021