அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆயிரத்து 283 ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
சட்டப் பேரவை விதி எண்.110-ன் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2,283 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி, மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன் அட்டையில் ஆதார் எண் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டையாக வழங்கப்படும். (உயர்கல்வித் துறை) இதேபோல, 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும். (சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை) வனத்துறை பணியாளர்களுக்கு காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கும், காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்பதற்கும் பயிற்சி அளிக்கப்படும்.
வேளச்சேரியில் அமைந்துள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வனத்துறை தலைமை அலுவலகக் கட்டடம் 70,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இரு தொகுதி கட்டடங்களாக 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். (தகவல் தொழில் நுட்பவியல் துறை) தொழில் முனைவோர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அதனைச் சார்ந்த வணிகத்தை தொடங்க ஏதுவாக, கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் எல்கோசெஸ்ஸில் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் திருச்சியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், இரண்டு தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள் கட்டப்படும்.
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் உட்கட்டமைப்புகளை இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளிலிருந்து கண்காணித்து, தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் பொருட்டு “தமிழ்நாட்டிற்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்” 21 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை மேம்படுத்தும் விதமாக, ஹெச்டி செட்டாப் பாக்ஸ் வாயிலாக சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்புகளையும் விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்டார்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…