மாணவர்கள் கவனத்திற்கு! தேர்வு தேதிகளில் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

SCHOOL STUDENTS

EXAM : தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம்.

தமிழகத்தில் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதேபோல மார்ச் 4ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு 25 தேதியுடன் தேர்வு நிறைவடைந்தது. இதுபோன்று, கடந்த 26ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த சூழலில், 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 18 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 2 முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதில், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வை ஏப்ரல் 22ம் தேதிக்கும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வை ஏப்ரல் 23ம் தேதிக்கும் மாற்றம் செய்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்க கோரிக்கை வந்த நிலையில், தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay
arjun tendulkar AND yograj
DhonI - fast stumpings