தென் மாவட்ட வெள்ள பாதிப்பு: முதலமைச்சரின் பயணத்தில் மாற்றம்.!
கடந்த ஞாயிற்று கிழமை முதல் (டிசம்பர் 17 மற்றும் 18) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும் முதலமைச்சரின் பயணத்தில் மீண்டும் மாற்றம் இன்றிரவு மதுரை சென்று அங்கிருந்து நெல்லை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தென் மாவட்ட வெள்ளப் பாதிப்புக்களை பார்வையிடும் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 10.15 மணிக்கு நேரடியாக தூத்துக்குடி செல்லும் முதல்வர் அங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறார். தூத்துக்குடி, நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக மதுரை செல்கிறார்.
என் கதறலை கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தாரு! மாரி செல்வராஜ் பேச்சு!
இதனை எடுத்து இரவு 10.40 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். இதற்கிடையில், பள்ளி, கல்லூரி, தனியார், அரசு நிறுவனங்கள் என அனைத்துக்கும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.