சந்திரபாபுநாயுடு அமைக்கும் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி ..!இல.கணேசன்
சந்திரபாபுநாயுடு அமைக்கும் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், சந்திரபாபுநாயுடு அமைக்கும் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். கூட்டணியில் இணைபவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கமாட்டார்கள். தமிழகத்திற்கு நிவாரண நிதியை தர மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.