இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்.!!
வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு. காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில பிற்பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் முன்னதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.