அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்என்று சென்னை வானிலை ஆய்வு மாயம் தகவல் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம்,புதுக்கோட்டை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை,திண்டுக்கல்,தேனி ,கரூர் , திருச்சி, விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, மேடவாக்கம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025