#Burevi Cyclone: 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
புரெவி புயல் திரிகோணமலையை நெருங்கும் நேரத்தில் 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரெவி புயலாக வலுப்பெற்றது.தற்போது புரெவி புயல்,இலங்கை திரிகோணமலைக்கு தென்கிழக்கில் 240 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .மேலும் பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
புரெவி புயல் இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலைக்கு வடக்கே நெருங்கக்கூடும். திரிகோணமலையை நெருங்கும் நேரத்தில் 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.டிசம்பர் 4-ஆம் தேதி அதிகாலை குமரி – பாம்பன் இடையே கரையை கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.