தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

தமிழகத்தில் நாளை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஆகிய மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் அந்த மழையும் அப்படியே தொடரும் என்றும், நாளை பொருத்தவரை நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025