8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!!
தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சியால் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென் தமிழகம் மற்றும் அதையொட்டி பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உட்பட 8 மாவட்டத்தில் இன்று இடியுடன் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி பகுதியில் உள்ள மாவட்டங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.
ஏனைய, மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக கன்னியாகுமரி, சிவலோகத்தில் 4 , சித்தாரில் 3 , கோவில்பட்டியில் 2.செ.மீ மழைபதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.