தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
மழைக்கு வாய்ப்பு :
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 10-ஆம்தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 11-ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- 12 முதல் 14 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வெயில் :
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெப்ப அலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும். எனவே, குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வெயிலின்போது, வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மோர், இளநீர் போன்ற குளிர்பானங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.