தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆந்திரா கடற்கரை மற்றும் அதையொட்டி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தேனி,திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 18ஆம் தேதி மன்னார் வளைகுடா, தென்மேற்கு தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்படுகிறது.
மேலும் செப்டம்பர் 18 மற்றும் 20ம் தேதி வரை கேரளா கர்நாடகா லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், மேலும் செப்டம்பர் 20-ம் தேதி வட கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.