7 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை 5.30 மணிக்குள் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மணிக்கு 13கி மீ-ல் இருந்து 10 கி.மீ-ஆக குறைந்தது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனவே, வானிலை தொடர்பான செய்திகளை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக அறிவித்து வருகிறது. அதன்படி, அடுத்த 3 மணி நேரம் அதாவது 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மாயம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய 18 மாவட்டங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,