காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
சென்னை உட்பட 9 மாவட்டங்களில் 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் கனமழை வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதே போல ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது, இருப்பினும் சென்னையில் நேற்று ஒரு துளி மழைக் கூட பெய்யவில்லை. இந்த நிலையில், தற்போது வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளுக்கு மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (18-10-2024) காலை 10 மணி வரை 9 மாவட்டங்களுக்கு லேசான மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 18, 2024