வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.